குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2025-க்குள் காசநோயை ஒழிக்க மக்கள் இயக்கத்திற்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு.

Posted On: 16 DEC 2021 7:36PM by PIB Chennai

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லா இந்தியாபிரச்சாரத்தில் மக்களை 'முக்கிய பங்காளிகளாக' உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.

"எல்லா நோய்களையும் விட, காசநோயை முற்றிலுமாக அகற்ற சமூகத்தின் ஈடுபாடு இன்றியமையாதது" என்று அவர் வலியுறுத்தினார். காசநோயின் தாக்கம் சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் மீது அதிகளவில் உணரப்படுவதைக் குறிப்பிட்ட அவர், காசநோயை ஒழிக்க வளங்களை பெருமளவில் திரட்டவும் பல துறைகளின் தலையீடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

மக்கள் இயக்கமாக உருவெடுத்தால் மட்டுமே காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய முடியும் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்த இயக்கத்தில் மக்களை ஈடுபடுத்த அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற டீம் இந்தியாஉணர்வை ஏற்று பல்முனை முயற்சிகள் தேவை என்றார் அவர்.

காசநோய்க்கு எதிராக பெண்கள் வெற்றி பெறுவதற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், காசநோய் தொடர்பாக இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது மாநாடு இது என்பதால் காசநோய் ஒழிப்பில் அரசின் உறுதி தெளிவாகத் தெரிகிறது என்றார். இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, பிற மக்கள் பிரதிநிதிகள், காசநோய் ஒழிப்புக்காக பாடுபடும் அமைப்புகள், காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

காசநோயிலிருந்து மீண்ட பெண்களை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார். காசநோயை எதிர்த்துப் போராட பாலின-உணர்திறன் அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்த அவர்; பெண்களுக்கு சிறந்த ஆலோசனை, ஊட்டச்சத்து மற்றும் வீடு தேடி பரிசோதனை ஆகியவற்றை பரிந்துரைத்தார்.

காசநோய் தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்என்று அவர் கேட்டுக்கொண்டார். காசநோய் பற்றிய களங்கத்தை அகற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளை உள்ளூர் மட்டத்தில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரையாடல்களில் பங்கேற்கவும் திரு நாயுடு அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782367

                           ****************


(Release ID: 1782453)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi