புவி அறிவியல் அமைச்சகம்
சமுத்ராயன் திட்டம்
प्रविष्टि तिथि:
16 DEC 2021 2:56PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் திரு .ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் இயக்கத்தின் கீழ், ஆழ்கடல் ஆய்வுக்காக மனிதர்களால் இயக்கப்படும் அறிவியல்பூர்வ நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சமுத்ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான தேசிய பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான நிறுவனம் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி), 500 மீட்டர் நீர் ஆழ மதிப்பீட்டில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் அமைப்புக்கான ' பணியாளர் கோளத்தை' உருவாக்கி சோதனை செய்தது.
2021 அக்டோபரில் சாகர் நிதி என்ற ஆராய்ச்சிக் கப்பலைப் பயன்படுத்தி லேசான எஃகினால் செய்யப்பட்ட பணியாளர் கோளம் வங்காள விரிகுடாவில் சோதிக்கப்பட்டது. டைட்டானியம் அலாய் கொண்டு 6000 மீட்டர் ஆழ மதிப்பீட்டில் மற்றொரு கோளம் திருவனந்தபுரம் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782196
*************
(रिलीज़ आईडी: 1782418)
आगंतुक पटल : 940