குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விஜயநகரம் தேங்காய் நார் தொகுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 DEC 2021 12:45PM by PIB Chennai

 பாரம்பரியத் தொழில்களை  நடத்தவும் பாரம்பரியக் கலைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை அளிக்கவும், பாரம்பரியத் தொழில்கள் மறுசீரமைப்பு நிதித்திட்டத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் விஜயநகரம், தேங்காய்நார் தொகுப்பு செயல்பட்டு வருகிறது. இது ரப்பர் கலந்த தேங்காய் நார் பொருட்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.203.32 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782136

 


(வெளியீட்டு அடையாள எண்: 1782345) வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu