ஜல்சக்தி அமைச்சகம்
கள நிலவரம் மற்றும் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக தேசிய ஜல் ஜீவன் திட்ட குழு ஜார்க்கண்ட் பயணம்
Posted On:
15 DEC 2021 12:04PM by PIB Chennai
ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, செரைகேலா கர்சவான் மற்றும் பூர்பி சிங்கம் ஆகிய மூன்று மாவட்டங்களில் தேசிய ஜல் ஜீவன் திட்டத்தின் பல்துறை குழு 2021 டிசம்பர் 14 முதல் 17 வரை பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த பயணத்தின் போது குழு உறுப்பினர்கள் பல்வேறு கிராமங்களுக்கு செல்கின்றனர் . அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பான குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்கான ஜல் ஜீவன் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆய்வு செய்வதோடு, கள நிலவரத்தை புரிந்து கொள்வது இப்பயணத்தின் நோக்கமாகும்.
மாவட்ட அதிகாரிகள், கிராம மக்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் போன்றவர்களுடன் அவர்கள் உரையாடுகிறார்கள். பல்வேறு அம்சங்களைப் பற்றி தெரிவிக்க மாநிலக் குழுவுடன் பின்னர் அவர்கள் தொடர்பு கொள்வார்கள்.
2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், மார்ச் 2022-க்குள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆசிரமங்கள் மற்றும் பிற பொது அமைப்புகளுக்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்க ஜார்கண்ட் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 3% கிராமப்புற குடும்பங்கள் ஜார்க்கண்டில் உள்ளன. ஆனால் நாட்டின் சுமார் 4.7% குழாய் நீர் இணைப்புகள் மாநிலத்தில் வழங்கப்பட உள்ளன.
2021-22-ல் திட்டமிடப்பட்ட 9.5 லட்சம் குடும்பங்களில் 2.39 லட்சம் (24.5%) வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை மாநிலம் இதுவரை வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781629
******
(Release ID: 1781762)
Visitor Counter : 217