உள்துறை அமைச்சகம்
தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் தமிழகத்திற்கு நடப்பாண்டில் ரூ.213.51 கோடி விடுவிப்பு
प्रविष्टि तिथि:
14 DEC 2021 2:59PM by PIB Chennai
நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பேரிடர் மீட்பு நிதி அனுப்பப்பட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து, அவ்வப்போது ஏற்படும் தேசிய பேரிடர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.வித்யானந்த ராய், 2018-19-லிருந்து மாநிலங்களுக்கு 2018-19-லிருந்து 2021-22 வரை விடுவிக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு 2018-19 ஆம் ஆண்டு ரூ.900.31 கோடியும், 2020-21-ல் ரூ.286.91 கோடியும் 2021-22-க்கு ரூ.213.51 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டு நிதி வழங்கப்படவில்லை.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781305
*****
(रिलीज़ आईडी: 1781343)
आगंतुक पटल : 541