வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 நவம்பர் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12)

Posted On: 14 DEC 2021 1:12PM by PIB Chennai

2021 நவம்பர் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டை (அடிப்படை ஆண்டு 2011-12) தொழில் மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ளது. தற்காலிக மொத்தவிலைக் குறியீட்டு எண்: ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) வெளியிடப்பட்டு வருகிறது.

ஆண்டு பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 14.23 சதவீதமாக (தற்காலிகம்) இருந்தது. இது 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.29 சதவீதமாக இருந்தது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு தயாரிப்புகள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் பண வீக்கமும் அதிகரித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781242

********


(Release ID: 1781307)
Read this release in: English , Urdu , Hindi