வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மை இந்தியா திட்டம்(நகர்ப்புறம்) 2.0 மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தால், நகரங்கள் 5 ஆண்டுகளில் தூய்மையாகும் மற்றும் தண்ணீர் வசதியை பெறும்
प्रविष्टि तिथि:
13 DEC 2021 3:51PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு கவுஷல் கிஷோர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
2021ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட தூய்மை இந்திய திட்டம்(நகர்ப்புறம்) 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகியவை நகரங்களை அடுத்த 5 ஆண்டுகளில் தூய்மையாக்குவதிலும், தண்ணீர் வசதி ஏற்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தும்.
தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புறம்) 2.0-ன் முக்கிய அம்சங்கள்:
வீடுகள் மற்றும் வளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகின்றன.
வீடுகள் , வளாகங்களுக்கு நேரடியாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
100 சதவீதம் அறிவியல் பூர்வமாக குப்பைகள் பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றன.
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு குறைவான நகரங்களில், கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு அகற்றப்படுவதால், நிலத்தடி நீர், நீர் நிலைகள் மாசுபடாது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் படிப்படியாக குறைக்கப்படுகிறது.
அம்ருத் 2.0 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* தண்ணீர் விநியோகம் 500 நகரங்களில் இருந்து, 4,800 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* நகரங்கள் தற்சார்புடையதாகவும், நீர் பாதுகாப்புடனும் மாறுவதில் கவனம் செலுத்தப்படும்.
500 அம்ருத் நகரங்களில் கழிவுநீர் மேலாண்மை வசதி ஏற்படுத்தப்படும்.
2.68 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள், 2.64 கோடி கழிவுநீர் குழாய் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780913
************
(रिलीज़ आईडी: 1781121)
आगंतुक पटल : 837