பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அதிக திறன் வாய்ந்த புதிய இயற்கை எரிவாயு காஸ் அடுப்பு
प्रविष्टि तिथि:
13 DEC 2021 3:35PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
குழாய்வழி இயற்கை வாயுவில் பயன்படுத்தும் வகையில், அதிக வெப்ப திறன் வாய்ந்த புதிய காஸ் அடுப்பை டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்... இந்திய பெட்ரோலிய கழகத்துடன் இணைந்து பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு (PCRA) உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற அடுப்பு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். குழாய்வழி இயற்கை எரிவாயுவை கையாளும் வகையில் இதன் பர்னர், ட்யூப் மற்றும் இதர அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அதிகளவிலான வெப்பத்தை வழங்கும் திறன் உடையது. இது மற்ற எல்பிஜி காஸ் அடுப்புகளை விட திறன் வாய்ந்தது.
எல்பிஜி காஸ் அடுப்பு விலைக்கு இணையாக இந்த புதிய காஸ் அடுப்பை பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு ஊக்குவிக்கிறது. இந்த புதிய அடுப்பை விற்பனை செய்ய இஇஎஸ்எல் நிறுவனத்திடம் பிசிஆர்ஏ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
***************
(रिलीज़ आईडी: 1781092)
आगंतुक पटल : 163