சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அனைவருக்குமான சுகாதார தின விழாவுக்கு டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை தாங்கினார்

Posted On: 13 DEC 2021 3:41PM by PIB Chennai

எவர் ஒருவரின் ஆரோக்கியமும் பின்னடையக் கூடாது: அனைவருக்குமான சுகாதார முறைகளில் முதலீடு” என்ற மையப் பொருள் மீதான துறைசார்ந்த  விவாதத்துடன்  அனைவருக்குமான சுகாதார தின விழா இன்று புதுதில்லியில் நடைபெற்றது.  இந்த விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை தாங்கினார்.  “பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் அடித்தளமாக அமைவது வலுவான மற்றும் உறுதியான சுகாதார முறையைக் கட்டமைப்பதாகும்” என்று அவர் பேசுகையில் கூறினார்.

கொவிட் காலத்தில் உலகம் முழுவதும் பல செயல்பாடுகள் தாமதமான நிலையில், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களின் பணி இந்தியாவில் அதிகரித்திருந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  இதுநாள் வரை 81 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், 1.10 லட்சம் மையங்கள் என்ற இலக்கு 2022 மார்ச் இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

“அனைவருக்கும் சுகாதாரம்” என்ற வழிகாட்டும் கோட்பாடு, “சுகாதார வீரர்களாக” நாம் பணியாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் தெரிவித்தார்.  நாடுதழுவிய  கொவிட் தடுப்பூசி இயக்கத்தின்கீழ் 133 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள்  செலுத்தி சாதனை படைத்ததற்காக மாநிலங்களுக்கும்,   அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும்  டாக்டர் பாரதி பிரவீன் பவார் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780901

****************



(Release ID: 1781047) Visitor Counter : 148