வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தலைநகரின் முக்கிய இடங்களை இணைக்கும் பிராந்திய அதிவிரைவுப் போக்குவரத்து முறை

Posted On: 13 DEC 2021 3:48PM by PIB Chennai

தேசிய தலைநகர் பிராந்திய திட்ட வாரியம், அதிவிரைவுப் போக்குவரத்துக்கான செயல்பாட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் மிக முக்கியமான இடங்களை அதிவிரைவு ரயில்கள் மூலம் இணைக்கும் 8 அதிவிரைவுப் போக்குவரத்து வழித்தடங்கள் இதில் அடங்கும். இவற்றில் தில்லி-காசியாபாத்-மீரட், தில்லி-குருகிராம்-ரெவாரி-ஆழ்வார், தில்லி-பானிபட் ஆகிய 3 திட்டங்கள் முன்னுரிமைத் திட்டங்களாகும். அதில் தில்லி-காசியாபாத்-மீரட் வழித்தடத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தில்லி-குருகிராம்-எஸ்என்பி-ஹர்பன் வளாக வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.

இத்தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு.கௌசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780907

                                         *****



(Release ID: 1781038) Visitor Counter : 103


Read this release in: English , Punjabi