பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உ.பி. மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு உற்பத்தி வழித்தடங்களின் உருவாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 DEC 2021 3:01PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் திரு சம்பாஜி சத்ரபதியின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் உத்தரப்பிரதேச விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் ஏரோ இந்தியா 2021-ன் போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற டெஃப்  எக்ஸ்போ 2020-ன் போது, உத்தரப்பிரதேச விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையே 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவற்றில் 6 நிறுவனங்களுக்கு அலிகார் முனையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான கோரிக்கை கடிதத்தை மகாராஷ்டிரா அரசு அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அமைந்து வரும் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்கள், அனைத்து மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சூழலை வலுப்படுத்துவதற்கான உந்துதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது வலியுறுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780869

****************


(வெளியீட்டு அடையாள எண்: 1780951) வருகையாளர் எண்ணிக்கை : 178
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu