சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினை தொழில் திறமைகளை பாதுகாப்பதில், ‘ கைவினைப் பொருட்கள் கண்காட்சி ’ முக்கிய பங்கு வகிக்கிறது: குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்

Posted On: 12 DEC 2021 4:14PM by PIB Chennai

நாட்டின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினை தொழில் திறமைகளை பாதுகாப்பதில், ‘ கைவினைப் பொருட்கள் கண்காட்சிமுக்கிய பங்கு வகிக்கிறது என  குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத் கூறியுள்ளார்.

34வது கைவினைப் பொருட்கள் கண்காட்சியை குஜராத்தின் சூரத் நகரில் வனிதா வீஷ்ரம் பரிசர் மையத்தில், மாநில ஆளுநர் திரு  ஆச்சார்ய தேவ்ரத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாட்டின் கலை மற்றும் திறன் பாரம்பரியத்தை கைவினைப் பொருட்கள் கண்காட்சி  கலைஞர்கள் புதுப்பித்துள்ளனர். இந்தியாவின் கவுரவத்தையும் அவர்கள் உயர்த்தியுள்ளனர்.

பழங்கால கலைகள் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும் பிரதமர் திரு நரேந்திர மோடி பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.  இதில் ஹூனார் ஹாத்எனப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி முக்கியமான தளமாக இருந்து, உள்ளூர் தயாரிப்பு பிரசாரத்துக்கு வலுவூட்டுகிறது.

கைவினைப் பொருட்கள் கண்காட்சி, இந்தியாவின் பழங்கால பாரம்பரியத்துக்கு மட்டும் மதிப்பளிக்காமல், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கிறது.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பது உண்மையிலேயே கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் வெளிப்படுகிறது. இவ்வாறு திரு ஆச்சார்ய தேவ்ரத் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி, கடந்த 6 ஆண்டுகளில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மூலம், 7 லட்சம் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் எனவும் குறிப்பிட்டார்.

 

இந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 600 மேற்பட்ட கலைஞர்கள் 300 கடைகளில் தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்தனர். நாட்டின் பாரம்பரிய உணவுகளும், இந்த கண்காட்சியில் கிடைக்கின்றன.

 

மேலும் தகவல்களுக்கு  இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780659

 

*****


(Release ID: 1780725) Visitor Counter : 211


Read this release in: English , Urdu , Hindi