வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் சூழலைக் கொண்டாடும் புதுமை வாரத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு
प्रविष्टि तिथि:
12 DEC 2021 4:40PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, ‘’புதுமையான சுற்றுச்சூழலை கொண்டாடுதல் ‘’ என்னும் ஒரு வாரகால நிகழ்ச்சிக்கு தொழில் மேம்பாடு மற்றும் உள் வர்த்தகத்துக்கான துறை (டிபிஐஐடி) 2022 ஜனவரியில் ஏற்பாடு செய்துள்ளது. டிபிஐஐடி-யின் செயலர் திரு அனுராக் ஜெயின் உயர்மட்டக் கூட்டத்தில் திட்டத்தை ஆய்வு செய்தார். ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதன் ஆறாவது ஆண்டை இந்த நிகழ்ச்சி குறிக்கும்.
நாட்டின் முக்கிய ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பவர்கள் மற்றம் உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றாக சேர்த்து, ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வைப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஒரு வாரகால நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப்கள், முன்னோடிகள், ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள்,பெருவணிக நிறுவனங்கள், தொழில்முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
கருத்தங்குகள், பட விளக்கங்கள், குழு விவாதங்கள், அனுபவ பகிர்தல் போன்றவற்றுக்கும் இதில் ஏற்பாடு செய்யப்படும். பல அமர்வுகள் நேரடியாகவும், மெய்நிகர் வடிவிலும் நடைபெறும். இந்த அமர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஸ்டார்ட் அப் சமூக ஊடகங்களில் நேரடியாகவும் ஒளிபரப்பாகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780666
***********
(रिलीज़ आईडी: 1780674)
आगंतुक पटल : 288