சுற்றுலா அமைச்சகம்

மகாராஷ்டிராவின் ஜோதிர்லிங்க கோவில்கள் குறித்த வலையரங்கிற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 11 DEC 2021 7:17PM by PIB Chennai

சுற்றுலா குறித்த பல்வேறு தலைப்புகளில் நமது தேசத்தை காணுங்கள்முன்முயற்சியின் கீழ் பல்வேறு வலையரங்குகளை சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

சுற்றுலா வழிகாட்டிகளுடன் 75 இடங்கள்”-என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, 'மகாராஷ்டிராவின் ஜோதிர்லிங்கம் கோயில்கள்' என்ற தலைப்பில் டிசம்பர் 11, 2021 அன்று வலையரங்கு நடத்தப்பட்டது. மண்டல அளவிலான வழிகாட்டி திரு உமேஷ் நாம்தேவ் ஜாதவ் இதை தொகுத்து வழங்கினார்.

பிரபலமான மற்றும் புனிதமான சமய மற்றும் ஆன்மீக இடங்கள் மகாராஷ்டிராவில் ஏராளமாக உள்ளன. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அவை ஈர்க்கின்றன.

திரிம்பகேஷ்வர் (த்ரியம்பகேஸ்வரா), பீமாசங்கர், பரலி வைஜ்நாத், கிரிஷ்ணேஸ்வர் மற்றும் அவுந்த் நாக்நாத் ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய ஜோதிர்லிங்கங்கள் ஆகும்.

ஜோதிர்லிங்கத்தின் வடிவில் சிவ பெருமான் உள்ள இந்த ஆலயங்கள் பழங்காலத்திலிருந்தே போற்றப்படுகின்றன. 12 ஜோதிர்லிங்கங்களில், தெற்கே தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரமும், வடக்கே இமயமலையில் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத்தும் அடங்கும். இந்த கோவில்கள் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை மற்றும் வரலாறு மற்றும் பாரம்பரியம் நிறைந்தவை.

https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured எனும் இணைய முகவரியில் இந்த வலையரங்குகளை காணலாம். கூடுதல் விவரங்களை https://www.facebook.com/incredibleindia/ மற்றும் https://instagram.com/incredibleindia?igshid=v02srxcbethv ஆகிய சமூக வலைப்பக்கங்களில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1780513

****



(Release ID: 1780537) Visitor Counter : 233