கலாசாரத்துறை அமைச்சகம்
நான்காவது மண்டல அளவிலான அகிய இந்திய வந்தே பாரதம் நிருத்ய விழா போட்டி நாளை தில்லியில் நடைபெறுகிறது
Posted On:
11 DEC 2021 6:06PM by PIB Chennai
விடுதலையின் 75-வது ஆண்டை அமிர்தப் பெருவிழாவாகக்க்கொண்டாடும் வகையில், பாதுகாப்பு அமைச்சகமும், கலாச்சார அமைச்சகமும் சேர்ந்து மேற்கொண்டுள்ள தனித்துவமான முன்முயற்சி வந்தே பாரத் ஆகும்.
2022 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழா அணிவகுப்பின் போது, நடனமாட சிறந்த திறமையானவர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்காவது மண்டல அளவிலான போட்டி நாளை ( டிசம்பர் 12) புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இது மண்டல அளவிலான கடைசி போட்டியாகும்.
வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்காக நடந்த போட்டிகளில் வென்ற சுமார் 25 குழுக்கள் இதில் பங்கேற்கும். ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ,தில்லி ஆகிய குழுக்கள் இதில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன. அகில இந்திய போட்டி மூலம், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் குழுக்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
200க்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 2400-க்கும் அதிகமான போட்டியாளர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுதில்லியில் இதன் இறுதிப்போட்டி நடைபெறும். வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும் 480 சிறந்த நடனக் கலைஞர்கள், குடியரசு தின விழா அன்று ராஜ்பாத்தில் நடைபெறும் அணிவகுப்பில் நடனமாடுவார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780487
****
(Release ID: 1780507)
Visitor Counter : 188