பாதுகாப்பு அமைச்சகம்
தங்காய்ல் பாராசூட் தாக்குதல்: போர் வெற்றியின் பொன் விழா
Posted On:
11 DEC 2021 5:46PM by PIB Chennai
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 11 டிசம்பர் 1971 அன்று, இந்திய ராணுவத்தின் 2-வது பாராசூட் பட்டாலியன் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் உள்ள தங்காய்லில் வெற்றிகரமாக தாக்குதலை மேற்கொண்டது.
லெப்டினன்ட் கர்னல் குல்வந்த் சிங் பன்னு தலைமையிலான குழுவுக்கு, பாகிஸ்தான் படைகளை எதிர்கொள்ளும் பணி வழங்கப்பட்டது. அவர்கள் அதை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு இதில் பங்கேற்ற வீரர்களுக்கு மனதைக் கவரும் மற்றும் மனதைத் தொடும் அஞ்சலியாக 11 டிசம்பர் 2021 அன்று ஆக்ராவில் வெற்றிச் சுடரின் முன்னிலையில் இந்த மைல்கல் நிகழ்வு நினைவுகூரப்பட்டது.
பாதுகாப்பு படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் டிசம்பர் 08 அன்று பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு இந்த நிகழ்வு அர்ப்பணிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் தங்காய்ல் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நடவடிக்கைகளில் பங்கேற்ற வீரர்கள், அந்த முக்கிய நிகழ்வின் நினைவேந்தலைக் காண ஆக்ராவில் குழுமினர். பாராசூட் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1780478
**************
(Release ID: 1780497)
Visitor Counter : 188