அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உயர்த்தும் - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
Posted On:
11 DEC 2021 3:42PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உயர்த்தும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்(தனி பொறுப்பு); புவி அறிவியல் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தித் துறை; விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எஃப் - 2021) ஏழாவது பதிப்பை கோவாவின் பனாஜியில் இன்று தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், நான்கு நாட்களுக்கு நடைபெறும் ஐஐஎஸ்எஃப் 2021 இன் கருப்பொருள் ‘75 ஆண்டு சுதந்திர திருவிழா’ - "செழிப்பான இந்தியாவுக்கான படைப்பாற்றல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புது கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுதல்" என்று கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடுகிறது, இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அறிவியல் முன்னேற்றத்திற்கான வரைபடத்தை அமைக்க வேண்டிய தருணம் இது என்று அவர் கூறினார்.
2024-25 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு "விஞ்ஞான உற்சவத்தில்" சேரவும், புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் முன்னணியில் இருக்கவும் வேண்டுமென இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார் அமைச்சர்.
ஐஐஎஸ்எஃப்-இன் முக்கிய நோக்கம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து அறிவியலைக் கொண்டாடுவதாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780432
*************
(Release ID: 1780461)
Visitor Counter : 400