பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் காவல் தன்னார்வலர்கள்
Posted On:
10 DEC 2021 4:00PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்களின் மகளிர் காவல் தன்னார்வலர்கள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த தன்னார்வலர்கள் துன்பத்திலிருக்கும் பெண்களுக்கு உதவ காவல் துறைக்கும் சமுதாயதத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறார்கள். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் தங்கள் மாநிலங்களில் இந்த முறையைப் பின்பற்ற முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம் மகேந்திர கார் மற்றும் கர்நால் மாவட்டத்தில் இந்த முறையை நாட்டிலேயே முதல் தடவையாக பின்பற்றியுள்ளது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைஅமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மக்களவையில் இத்தகலை எழுத்து மூலம் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780112
******
(Release ID: 1780344)