ஆயுஷ்
azadi ka amrit mahotsav

நாட்டில் 14 நேச்சுரோபதி மருத்துவமனைகள் மற்றும் 93 மருந்தகங்கள் செயல்படுகின்றன

Posted On: 10 DEC 2021 5:13PM by PIB Chennai

நாட்டில் 14 நேச்சுரோபதி மருத்துவமனைகள் மற்றும் 93 மருந்தகங்கள் செயல்படுவதாக ஆயுஷ் அமைச்சகத்தின் வருடாந்திர புள்ளி விவரம்  கூறுகிறதுபுனேயில் உள்ள தேசிய நேச்சுரோபதி நிறுவனம், ஆயுஷ் அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும் இது மக்களுக்கு  நேச்சுரோபதி சிகிச்சையை வழங்கி வருகிறது.

புதுதில்லியில் உள்ள மத்திய யோகா ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நேச்சுரோபதி என்னும், யோகா மற்றும் நேச்சுரோபதி ஆராய்ச்சிக்கான அமைப்பாகும். இதன் கீழ் இயங்கி வரும் மததிய யோகா மற்றும் நேச்சுரோபதி ஆராய்ச்சி நிறுவனம் , நேச்சுரோபதி சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இத்தகவலை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் எழுத்து மூலம் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780190

­---


(Release ID: 1780258)
Read this release in: English , Urdu , Marathi , Bengali