ஆயுஷ்

ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் ஆற்றல்

Posted On: 10 DEC 2021 5:12PM by PIB Chennai

ஆயுர்வேதத்தின் ஆற்றல் குறித்து  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஃ

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆயுஷ் என்ற 3 மாத கால பிரச்சாரம், முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பான இணையவழி கருத்தரங்கு 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.  பெருந்தொற்று பரவாமல் தடுக்க நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும் சம்ஷாமணிவாத்தி, அஸ்வகந்தாவாத்தி,  என்னும்  ஆயுஷ் ப்ரோபைலாக்டிக் மருந்துகள் விநியோகிக்கப்பட்டன.   

மேலும் பல நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டதாக அத்துறைக்கான அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780188

-----



(Release ID: 1780256) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Bengali