ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு

प्रविष्टि तिथि: 10 DEC 2021 5:11PM by PIB Chennai

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருந்துகளை தயாரிப்பதற்கு உரிமம் பெற்றவர்கள் மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். மருந்துகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்வது  அவசியமாகும்.

  ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றைக் கண்காணிப்பதில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. 7,345 ஆயுர்வேதம், 151 சித்தா, 566 யுனானி , 345 ஹோமியோபதி மருந்து உற்பத்தியாளர்கள்  ஆயுஷ் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 152 ஆயுர்வேதம், 5 சித்தா, 139 யுனானி, 9 ஹோமியோபதி மருந்து தயாரிப்பாளர்கள் இந்தப் பொருட்களை உற்பத்தி செய்து வருவதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780187

----


(रिलीज़ आईडी: 1780253) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu