பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

800 சைனிக் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க காந்தி நகர் ஐஐடிஇ,-வுடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2021 3:54PM by PIB Chennai

சைனிக் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக காந்தி நகர் இந்திய ஆசிரியர் கல்வி நிறுவனமான -ஐஐடிஇ-உடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.

புதுதில்லியில் இந்த ஒப்பந்தத்தில் இன்று (டிசம்பர் 10-ம் தேதி) பாதுகாப்பு  அமைச்சகத்தின் சார்பில் திரு ராஜேஷ் மிட்டல்,  ஐஐடிஇ-யின் பதிவாளர் டாக்டர் ஹிமான்சு படேல் ஆகியோர் பாதுகாப்புத்துறை செயலர் டாக்டர் அஜய் குமார், ஐஐடிஇ, துணைவேந்தர் டாக்டர் ஹர்ஷத் படேல் ஆகியோர் முன்னிலையில், கையெழுத்திட்டனர்.

2022 ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகாலத்திற்கு அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து சைனிக் பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு குருதிக்சா, பிரதிபத்தா ஆகிய  பாடத்திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780103

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1780241) வருகையாளர் எண்ணிக்கை : 165
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी , Bengali