உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய உணவுப் பதப்படுத்துதல் கொள்கை

प्रविष्टि तिथि: 10 DEC 2021 1:16PM by PIB Chennai

உணவுப் பதப்படுத்துதல் துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இருப்பினும், சில முக்கிய சவால்களை அத்துறை எதிர்கொண்டு வருகிறது. விநியோகச் சங்கிலி, உள்கட்டமைப்பு,  குறைந்த அளவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இடைவெளி, உள்ளிட்ட இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், வரைவு தேசிய உணவுப் பதப்படுத்துதல் கொள்கை உத்திகளை வகுத்துள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் வழங்கும் சேவைகளை ஒருங்கிணைக்க இந்தக் கொள்கை வழிவகுக்கிறது.

விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பை வலுப்படுத்த கணிசமான அளவுக்கு முதலீட்டை அதிகரித்தல், அழுகும் பொருட்களை பதப்படுத்தல் திறனை விரிவாக்குதல் போன்றவை இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்களாகும். 

இந்த வரைவுக் கொள்கை 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்டள்ள சவால்களால் அதில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780034

-----


(रिलीज़ आईडी: 1780147) आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali