சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் புனித யாத்திரைக்கான பதிவு
प्रविष्टि तिथि:
09 DEC 2021 4:58PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
இந்திய முஸ்லிம்கள், ஹஜ் புனித யாத்திரையை எளிதாக மேற்கொள்ள, ஹஜ் யாத்திரை நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் / ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நடைமுறை சுமூகமாகவும், வெளிப்படை தன்மையுடனும், இடைத்தரகர்கள் இன்றி நடக்கிறது. இதன் மூலம் ஹஜ் யாத்திரிகள், தனியார் ஹஜ் யாத்திரை ஏற்பாட்டாளர்கள், இந்திய ஹஜ் கமிட்டியினர் உட்பட பல தரப்பினர் பயனடைந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பும் யாத்திரிகள் www.hajcommittee.gov.in என்ற இணையளம் மற்றும் கைப்பேசி செயலியில் 2022 ஜனவரி 31ம் தேதி வரை, தங்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779770
****************
(रिलीज़ आईडी: 1779906)
आगंतुक पटल : 181