தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேலைவாய்ப்பு சூழலில் முன்னேற்றம்: வருங்கால வைப்புநிதி அமைப்பில் 2021 செப்டம்பரில் 15.41 லட்சம் பேர் இணைந்தனர்

Posted On: 09 DEC 2021 2:12PM by PIB Chennai

வேலைவாய்ப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது என்பதை தொழிலாளர் பங்கேற்பு விகிதம், தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் மற்றும் வேலையின்மை விகிதம் ஆகியவை வெளிப்படுத்துகின்றன.

2017-18-ல் 49.8% ஆகவும், 2018-19-ல் 50.2% ஆகவும் இருந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2019-20-ம் ஆண்டில்  53.5% ஆக உயர்ந்துள்ளது.

2017-18-ல் 6.0% ஆகவும் 2018-19-ல் 5.8% ஆகவும் இருந்த வேலையின்மை விகிதம் 4.8% ஆக குறைந்துள்ளது, இது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் 2017-18-ல் 46.8% ஆகவும், 2018-19-ல் 47.3% ஆகவும் இருந்து 50.9% ஆக அதிகரித்துள்ளது என்று தரவு மேலும் காட்டுகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் இப்போது வேலையில் உள்ளனர் என்பதை இது குறிக்கிறது.

2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளால் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது.

நவம்பர் 20, 2021 அன்று வெளியிடப்பட்ட வருங்கால வைப்புநிதி அமைப்பின் தற்காலிக ஊதியத் தரவுகளின்படி, 2021 செப்டம்பர் மாதத்தில் சுமார் 15.41 லட்சம் நிகர சந்தாதாரர்களை வருங்கால வைப்புநிதி அமைப்பு சேர்த்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1779665



(Release ID: 1779719) Visitor Counter : 207