தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகத்தரவரிசையில் நியூஸ் ஆன் ஏர் வானொலி நேரலை

முதல் 10 இடத்தில் ஏஐஆர் தமிழ் இடம் பெற்றுள்ளது

Posted On: 09 DEC 2021 12:11PM by PIB Chennai

இந்தியா தவிர்த்த நாடுகளில், சமீபத்திய தரவரிசைபடி, நியூஸ் ஆன் ஏர் செயலி, அகில இந்திய வானொலி உலகச்சேவை போன்ற அகில இந்திய வானொலியின் நேரலை வரிசைக்கு, சவூதி அரேபியா, குவைத், பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நேயர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஏஐஆர் அலைவரிசை உலகத்தரவரிசையில் (இந்தியா தவிர) ஏஐஆர் உலகசேவை, ஏஐஆர் மங்களூர், ஏஐஆர் ராகம், எஃப் எம் கோல்டு தில்லி, ஏஐஆர் மலையாளம், ஏஐஆர் தமிழ் ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.

பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அகில இந்திய வானொலியின் நேரலை வரிசைகள் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

அகில இந்திய வானொலியின் 240க்கும் மேற்பட்ட வானொலி சேவைகள், பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர் செயலியில் நேரலையாக ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏராளமான நேயர்களிடம்  வரவேற்பு காணப்படுகிறது.

நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரையிலான நியூஸ் ஆன் ஏர்  உலகத் தரவரிசையில் ஏஐஆர் தமிழ் 8-வது இடத்தில் உள்ளது.

நியூஸ் ஆன் ஏர் பிரபலமான உலக நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் , ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஏஐஆர்தமிழ் அமெரிக்காவில் 5-வது இடத்திலும், ஏஐஆர்-கோயம்புத்தூர், ஏஐஆர்-மதுரை ஆகியவை பிரிட்டனில் 7-வது மற்றும் 8-வது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூரில் ஏஐஆர் கொடைக்கானல் மூன்றாவது இடத்திலும், ஏஐஆர் காரைக்கால் 4-வது இடத்திலும். ஏஐஆர்-சென்னை ரெயின்போ 5-வது இடத்திலும், ஏஐஆர்கோயம்புத்தூர் எஃப்எம் ரெயின்போ 7-வது இடத்திலும், ஏஐஆர்-சென்னை எஃப்எம் கோல்டு 8-வது இடத்திலும்ஏஐஆர்-திருச்சி 9-வது இடத்திலும், ஏஐஆர்-சென்னை பி 10-வது இடத்திலும் உள்ளன.

ஏஐஆர் சென்னை ரெயின்போ சவூதி அரேபியாவில் 3-வது இடத்திலும், ஏஐஆர்- கொடைக்கானல் 6-வது இடத்திலும் உள்ளன. குவைத்தில் ஏஐஆர் கொடைக்கானல் 5-வது இடத்திலும், ஏஐஆர்-சென்னை ரெயின்போ 7-வது இடத்திலும், ஏஐஆர்-காரைக்கால் 9-வது இடத்திலும் , ஏஐஆர்-மதுரை பிசி 10-வது இடத்திலும் உள்ளன.

ஏஐஆர்-தமிழ், அமெரிக்காவில் முதலிடத்தையும், அயர்லாந்தில் 2-வது இடத்தையும், கத்தாரில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779617



(Release ID: 1779641) Visitor Counter : 148