சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதமரின் நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டிற்கு ரூ 706.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2021 3:48PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கீழ்க்காணும் தகவல்களை தெரிவித்தார்.

சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பிரதமரின் நலத்திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு மாவட்ட கனிம நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

2021 அக்டோபர் வரை தமிழகத்திலிருந்து மாவட்ட கனிம நிதியின் வாயிலாக ரூ 888.89 கோடி வசூலான நிலையில், சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதமரின் நலத்திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ரூ 706.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779266

***************

(Release ID: 1779266)


(வெளியீட்டு அடையாள எண்: 1779467) வருகையாளர் எண்ணிக்கை : 261
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu