நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்க்கரை ஏற்றுமதி 17.45 சதவீதம் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 08 DEC 2021 4:19PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதாவது:

2020-21ம் ஆண்டு 70 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 17.45 சதவீதம் அதிகம். 

2021-22ம் நிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி 308 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் எனவும், உள்நாட்டு நுகர்வு 270 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 35 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. 

சர்க்கரை ஆலைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் பணத்தை வழங்கவும், கூடுதல் சர்க்கரையை எத்தனால் தயாரிப்புக்கு அனுப்ப சர்க்கரை ஆலைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779287

                                                                                *************

 

 


(रिलीज़ आईडी: 1779452) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu