பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையைக் கண்காணிப்பதற்கான திட்டம்

Posted On: 08 DEC 2021 3:39PM by PIB Chennai

ஊட்டச்சத்து குறைபாடு பலவகை பிரச்சினையைக் கொண்டதாகும்.  சிறுவயதில் திருமணம், குறைபிரசவ குழந்தை, குழந்தைப்பருவ சுகவீனம், எடைகுறைவாக பிறத்தல் போன்றவை ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களாகும்.  இதனைத் தீர்ப்பதற்கு பலமுனை அணுகுமுறை தேவைப்படுகிறது. 

இதன் அடிப்படையில் பள்ளிகளில் தேசிய மதிய உணவுத் திட்டம் என்று ஏற்கனவே அறியப்பட்ட பிரதமரின் போஷன் சக்தி நிர்மாண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இது பெரும்பாலும் உரிமைகள் அடிப்படையிலான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களில் ஒன்றாகும்.  இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறார்களை உட்படுத்தியது.

இந்தத் திட்டத்தின்கீழ் ஆரம்பப் பள்ளியில் பயிலும் சிறார்களுக்கு 450 கலோரி சமைத்த சூடான உணவும், 12 கிராம் புரதமும், நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 700 கலோரி சமைத்த சூடான உணவும், 20 கிராம் புரதமும் வழங்க வேண்டும் என்பது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் இரண்டாவது அட்டவணைப்படி கட்டாயமாகும்.  அனைத்து வேலை நாட்களிலும், பருப்பு, காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் சமைப்பதற்கான செலவுக்கு ஆரம்பப் பள்ளிக்கு நாளொன்றுக்கு ரூ.4.97-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.7.45-ம் வழங்கப்படுகிறது.

மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸுபின் இரானி எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779251

••••••••••••••


(Release ID: 1779361) Visitor Counter : 207
Read this release in: English , Bengali , Telugu