பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

Posted On: 07 DEC 2021 6:16PM by PIB Chennai

வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. குறுகிய தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் இலக்கை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை, செங்குத்தான  ஏவுதளத்திலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஏவுகணை சென்ற பாதை, பல கருவிகள் மூலம் சாந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் கண்காணிக்கப்பட்டதுஏவுகணையின் அனைத்து பாகங்கள் மற்றும் கருவிகளும், எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டன. இந்த பரிசோதனையை டிஆர்டிஓ மற்றும் கடற்படை அதிகாரிகள் கண்காணித்தனர். ஏவுகணையின் அடுத்தகட்ட  சோதனைகள்  போர்க்கப்பலில் இருந்து ஏவி பரிசோதிக்கப்படவுள்ளன.

இதன் முதல் பரிசோதனை கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்தது. தற்போதைய சோதனை வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படையினர் மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை, இந்திய போர்க்கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

     ஏவுகணை சோதனை வெற்றிக்காக, இதன் தயாரிப்பில் ஈடுபட்ட குழுக்களுக்கு டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778966

 

----(Release ID: 1779023) Visitor Counter : 293


Read this release in: English , Urdu , Hindi , Odia