சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்று மீண்டும் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 07 DEC 2021 3:48PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 தாக்கத்தைத் தடுக்கவும் குறைக்கவும் பரிசோதனை-கண்காணிப்பு-சிகிச்சை, கொவிட் பொருத்தமான நடத்தைமுறை மற்றும் தடுப்பூசி எனும் ஐந்து முனை உத்தியை கடைப்பிடிப்பதன் மூலம், நாட்டில் கொவிட்-19 நிலைமையை இந்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சார்ஸ்-கொவி-2 மரபணு வரிசைமுறை மற்றும் மாறுபட்ட வகைகளின் பரிணாமத்தை கண்காணிப்பதற்காக இந்திய சார்ஸ்-கொவி-2 மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பை இந்திய அரசு நிறுவியுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று மீண்டும் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. கொவிட்-19 மற்றும் பிற பொது சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்ளும் திறன்களை மேம்படுத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

கொவிட்-19- நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதற்கும், சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு

 

* மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்கள்/ஆலோசனைகள்/நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்/திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகளுடன் கூடிய கொவிட்-19 மருத்துவ மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்கள் அதிகளவில் விநியோகிக்கப்படுகின்றன.

* டிசம்பர் 1, 2021 நிலவரப்படி, கொவிட்-19 கண்டறியும் சோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 3062 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* கருப்பு பூஞ்சை தடுப்பு மற்றும் மருத்துவ மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் சரிபார்ப்புப் பட்டியல்கள் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778832

 

-----



(Release ID: 1779017) Visitor Counter : 147


Read this release in: English , Urdu , Manipuri , Telugu