சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அளவில் அமலாக்கப்படும் நோய் ஒழிப்புத் திட்டங்கள்

Posted On: 07 DEC 2021 3:47PM by PIB Chennai

மலேரியா, யானைக்கால் நோய், ஒட்டுண்ணி நோய், காசநோய், தொழுநோய் போன்ற பல்வேறு நோய்களை ஒழிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதன் படி சில நோய்களுக்கு கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1. மலேரியா – 2030-க்குள்  ஒழிக்க இலக்கு

2. யானைக்கால் நோய் -2030-க்குள்  ஒழிக்க இலக்கு

3. ஒட்டுண்ணி நோய்-2023-க்குள் ஒழிக்க இலக்கு

தொழுநோய்க்கு, தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்குடன் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆதரவில் செயல்படுத்தப்படுவதாகும். மாவட்ட அளவில் 10,000 மக்கள் தொகையில் ஒன்றுக்கும் குறைவாக இந்த நோயை கட்டுப்படுத்துவது தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் நோக்கமாகும். இரண்டாவது கட்டத்தில் புதிய நோயாளிகள் உருவாகாமலும், குழந்தைகளுக்கு இந்த நோயே இல்லாமல் செய்வதும் இலக்காகும்.

உலக அளவிலான நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான 2030-ம் ஆண்டுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 2025 வாக்கில் காசநோயை ஒழிப்பதற்கும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

 நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தொற்றுநோய் ஒழிப்புக்கு ரூ.48.06 லட்சமும் தொழுநோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.165 லட்சமும், காச நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.6,497 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரிக்கு தொழுநோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.5 லட்சமும், காச நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.417 லட்சமும் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை இன்று மாநிலங்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

                                                                                                ********
 


(Release ID: 1778969) Visitor Counter : 1098


Read this release in: English , Bengali , Telugu