சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மை சமுதாயத்தினருக்கான கல்வி உதவித்தொகை திட்டம்

Posted On: 06 DEC 2021 4:02PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்  மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

புத்தமதம், கிறிஸ்தவம்,ஜெயின், முஸ்லிம், பார்சி மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித் தொகை, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களை சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.

மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் கீழ், பேகம் ஹஸ்ரத் மஹல் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம், அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையின மாணவிகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-15ம் ஆண்டு முதல் 5.10 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம்(என்எஸ்பி) இந்த உதவித் தொகை பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இவர்களில் 52 சதவீதம் பேர் பெண்கள்.

 2021-22ம் நிதியாண்டில் சிறுபான்மையினரின் கல்வி உதவித் தொகைக்காக ரூ.2329.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மொத்தம் 16,44,997 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 13,995 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778489

***********



(Release ID: 1778818) Visitor Counter : 200


Read this release in: English , Urdu