நிதி அமைச்சகம்

கடந்த 3 நிதியாண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செலுத்துதல் அதிகரித்துள்ளது

Posted On: 06 DEC 2021 5:49PM by PIB Chennai

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்துள்ள தகவல்களின் படி, நாட்டில் உள்ள சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மற்றும் நேர்மறையான தாக்கத்தை டிஜிட்டல் இந்தியா திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் காரத் இதனைத் தெரிவித்தார்.

எடுக்கப்பட்ட முன்முயற்சியின் விளைவாக, கடந்த 3 நிதியாண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

2018-19-ல் 2,32,602 லட்சம் பரிவர்த்தனைகளும், 2019-20-ல் 3,40,025 லட்சம் பரிவர்த்தனைகளும், 2020-21-ல் 4,37,445 லட்சம் பரிவர்த்தனைகளும், 2021-22-ல் 2021 அக்டோபர் வரை 3,68,284 லட்சம் பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன.

மேலும் விவரங்களை அளித்த அமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, செப்டம்பர் 7, 1999 முதல் பல்வேறு வகையான சேவைக் கட்டணங்களை நிர்ணயிக்கும் சுதந்திரம் பட்டியலிலுள்ள வணிக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணங்களை நிர்ணயிக்கும் போது, கட்டணங்கள் நியாயமானவையாக இருப்பதையும், சேவைகளை வழங்குவதற்கான சராசரி செலவை மீறாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களின் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778556

                                                                         ***************



(Release ID: 1778814) Visitor Counter : 156


Read this release in: Urdu , English , Telugu