சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு

Posted On: 06 DEC 2021 5:16PM by PIB Chennai

தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வு மற்றும் கழிவுகள் மாசுபாட்டின் பல ஆதாரங்களில் ஒன்றாகும். மிகவும் மாசுபடுத்தும் (17 வகை) தொழில்களான குளோர் அல்கலி, பூச்சிக்கொல்லி, மருந்து, பெட்ரோ கெமிக்கல், சாயம், உரம், எண்ணெய் சுத்திகரிப்பு, கனிம ரசாயனங்கள் மற்றும் கரிம ரசாயனம் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்ளன.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உள்ளிட்டவை மூலம் கழிவுநீர் மற்றும் உமிழ்வு தரநிலைகள் கண்காணிக்கப்படுகின்றன. விதிகளை மீறும் தொழில்கள் மீது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை அதன் இணையதளத்தில் பின்வரும் இணைப்புகளில் காணலாம்:

https://cpcb.nic.in /cpcb-directions-5ep.php 

https://cpcb.nic.in/cpcb-directions.php

2019-2021 வரை கடந்த 3 ஆண்டுகளில் 271 தொழிற்சாலைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்துள்ளது. அவற்றில் 104 நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குத் இணங்க இல்லை எனக் கண்டறியப்பட்டு நோட்டீஸ் மற்றும் மூடுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அந்த 104 தொழிற்சாலைகள் 78 மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளுக்கு தற்போது இணங்குகின்றன. மீதமுள்ளவற்றின் மீது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இத்தகவலை இன்று மக்களவையில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778527

(Release ID: 1778527)


(Release ID: 1778808)
Read this release in: English , Urdu