நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நாட்டில் உள்ள 5.33 லட்சம் நியாய விலைக்கடைகளில், 4.98 லட்சத்துக்கும் மேற்பட்ட (93.5%) கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன
Posted On:
03 DEC 2021 3:35PM by PIB Chennai
பொது விநியோகத் திட்ட சீர்திருத்தத்தின்படி, நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வெளிப்படையான, திறன்மிக்க மற்றும் மானிய விலை உணவு தானியங்களை பயனாளிகளுக்கு விநியோகிப்பதை உறுதி செய்ய, மின்னணு விற்பனை சாதனங்கள் மற்றும் பயோ மெட்ரிக் ஸ்கேனர்கருவிகளை பொருத்தும்படி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை நவம்பர் 2014-ல் தகவல் அனுப்பியிருப்பதாக இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டில் உள்ள 5.33 லட்சம் நியாய விலைக்கடைகளில், 4.98 லட்சத்துக்கும் மேற்பட்ட (93.5%) கடைகளில் மின்னணு விற்பனை சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக கூறியுள்ளார்.
மின்னணு விற்பனை சாதனங்கள் மூலம் உணவு தானியங்களை விநியோகிப்பது எளிதான நடைமுறை என்றும், இதற்கென பயனாளிகள் தனியாக டிஜிட்டல் அறிவைப் பெற்றிருப்பது அவசியம் அல்ல என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777648
----
(Release ID: 1777784)
Visitor Counter : 156