சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஹஜ் யாத்திரிகளுக்கான பயண விதிமுறைகள்

Posted On: 02 DEC 2021 4:15PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

2022 ஹஜ் பயணத்துக்கான வழிகாட்டுதல்கள் இந்திய ஹஜ் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக, சவுதி அரேபியாவின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, இந்தாண்டு புதிய தற்காலிக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹஜ் யாத்திரைக்கான ஒதுக்கீடு கடந்த 2019ம் ஆண்டில் 2,00,000-மாக அதிகரிக்கப்பட்டது. கொவிட் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் யாத்திரைக்கு சர்வதேச யாத்திரிகளை சவுதி அரேபிய அனுமதிக்கவில்லை.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777253

****



(Release ID: 1777450) Visitor Counter : 205


Read this release in: English , Urdu