சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மை நிறுவனங்களில் நியமன உறுப்பினர்கள்
Posted On:
02 DEC 2021 4:02PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அமைப்புகள்: (1) இந்திய ஹஜ் குழு; (2) மத்திய வக்பு கவுன்சில்; (3) தேசிய வக்பு வளர்ச்சி கார்ப்பரேஷன்; (4) மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை; (5) தேசிய சிறுபான்மையினர் ஆணையம்; (6) தர்கா காஜா சகிப்,ஆஜ்மீர். இந்த அமைப்புகள் தவிர மக்களவை உறுப்பினர்கள் மத்திய வக்பு கவுன்சில்(சிடபிள்சி), புதுதில்லி மற்றும் மும்பை ஹஜ் கமிட்டியில் நியமிக்கப்படுகின்றனர். 1995 வக்பு சட்டப்படி மக்களவையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களில் 2 பேர மத்திய வக்பு கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கும். மேலும், 2002 ஹஜ் கமிட்டி சட்டப்படி, மக்களவை முஸ்லிம் உறுப்பினர்களில் 2 பேர், மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுவரார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777247
****
(Release ID: 1777434)
Visitor Counter : 158