உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
கடந்த 3 ஆண்டுகளில் ஆறு பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 5 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது
प्रविष्टि तिथि:
02 DEC 2021 2:38PM by PIB Chennai
கடந்த 3 ஆண்டுகளில் கீழ்காணும் 6 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன: கேரளாவில் கண்ணூர் விமான நிலையம் (2018), கர்நாடகாவின் கலபுராகி (2019), ஆந்திரப்பிரதேசத்தில் கர்நூல் (2021) மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் (2021), மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குஷி நகர் (2021) விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இது தவிர கடந்த 3 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் நாவி மும்பை, கோவாவின் மோபா, ராஜ்கோட்டில் ஹிராசர், உத்தரப்பிரதேசத்தில் ஜேவார் (நொய்டா) மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் இடா நகரில் ஹோலங்கி ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் மொத்தம் 13 பசுமை விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உடான் திட்டத்தின் கீழ் 42 விமான நிலையங்கள் / ஓடுதளங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777194
****
(रिलीज़ आईडी: 1777379)
आगंतुक पटल : 228