உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

சில விமான நிலையங்களில் கதிரியக்க கண்காணிப்பு சாதனங்களை நிறுவ பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

Posted On: 02 DEC 2021 2:36PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் மற்றும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப விமான நிலையங்களில் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு வருகிறது.  விமான நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள விதிமுறைகளின்படி, விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் சில சுற்றறிக்கைகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறார்.  

இதற்கேற்ப தேவையான பாதுகாப்பு சாதனங்களை விமான நிலையங்களில் அமைப்பதற்கு, விமான நிலைய நிர்வாகங்கள் தேவையான இடத்தை வழங்கி வருகின்றன. இதன்படி கதிரியக்க அடிப்படையிலான கண்காணிப்பு சாதனங்களை விமான நிலையங்களில்  அமைப்பதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ரூ.60.76 கோடியை செலவிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங்,  மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777191



(Release ID: 1777343) Visitor Counter : 122


Read this release in: English , Urdu