குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஸ்ஃபுர்தி திட்டத்தின் ஒருங்கிணைப்பு
प्रविष्टि तिथि:
02 DEC 2021 2:00PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாரயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஸ்ஃபுர்தி குழுக்களின் லாபம் மற்றும் சந்தைத்திறன் குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் தொடர் மதிப்பீட்டை நடத்துகிறது. ஆய்வு கூட்டங்கள், நேரடி ஆய்வுகள், மூன்றாம் நபர் மதிப்பீடு மூலம் இது செய்யப்படுகிறது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இக்குழுக்களுக்கு சிறப்பு ஆதரவு தேவை என்று தெரிய வந்துள்ளது. இதை உறுதி செய்வதற்காக, வடிவமைப்பு மேம்பாடு மற்றும் தயாரிப்புகளை பல்வகைப்படுத்துதல், மின் வர்த்தக தளங்களுடன் இணைப்புகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு முயற்சிகளை அமைச்சகம் எடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777169
*****
(रिलीज़ आईडी: 1777311)
आगंतुक पटल : 256