உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமான விதிமுறைகள் 1937-ன் கீழ் நியாயமான கட்டணத்தை சுதந்திரமாக நிர்ணயிக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2021 2:37PM by PIB Chennai

விமானங்களின் இயக்க செலவினம், சேவையின் தன்மை, ஓரளவு லாபம் மற்றும் பொதுவாக நிலவும் கட்டண விகிதம் உள்ளிட்ட அம்சங்ளின் அடிப்படையில், விமான நிறுவனங்கள், நியாயமான விமானப் பயணக் கட்டணத்தை சுதந்திரமான முறையில், 1937-ம் ஆண்டின் விமான விதிமுறைகளின்படி நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

விமானக் கட்டணங்கள் அரசால் முறைப்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மையை பராமரிக்கும் விதமாக, குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமானக் கட்டணத்தை, சிவில் போக்குவரத்துத்துறை தலைமை இயக்குநர் கண்காணித்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என சிவில் விமானப்  போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777192

-----

(Release ID: 1777192)

 


(வெளியீட்டு அடையாள எண்: 1777279) வருகையாளர் எண்ணிக்கை : 149
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu