ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயன்படுத்தப்படாத, காலியாக உள்ள ரயில்வே நிலங்களில் சூரிய மின்சக்தித் திட்டங்களை நிறுவ இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 DEC 2021 5:14PM by PIB Chennai

பயன்படுத்தப்படாத, காலியாக உள்ள ரயில்வே நிலங்களில் சூரிய மின்சக்தித் திட்டங்களை நிறுவ இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே, தகவல்கள் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதிலளித்த அமைச்சர், சத்தீஸ்கர் (50 மெகாவாட்), உத்தரப்பிரதேசம் (3 மெகாவாட்), ஹரியானா (2 மெகாவாட்), மத்தியப் பிரதேசம் (1.7 மெகாவாட்), மகாராஷ்டிரா (15 மெகாவாட்) ஆகிய மாநிலங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

•••••••••••••


(வெளியீட்டு அடையாள எண்: 1777014) வருகையாளர் எண்ணிக்கை : 290
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu