உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் குறு உணவு பதப்படுத்தல் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து 411 விண்ணப்பங்கள்

प्रविष्टि तिथि: 30 NOV 2021 1:05PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உணவு பதப்படுத்தல் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பிரதமரின் குறு உணவு பதப்படுத்தல் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் குறு உணவு பதப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள  876 தனிநபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 710 மாவட்டங்களை சேர்ந்த 137 பிரத்யேக பொருட்களுக்கு ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து 403 தனிநபர் விண்ணப்பங்களும், 5 சுய உதவிக்குழு விண்ணப்பங்களும், 3 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன. புதுச்சேரியில் இருந்து 20 தனிநபர் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 37 பொருட்களுக்கும், புதுச்சேரியை சேர்ந்த 2 பொருட்களுக்கும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776393

***********


(रिलीज़ आईडी: 1776574) आगंतुक पटल : 269
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi