தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்கமயில் விருதை வென்றது ஜப்பானிய திரைப்படம் ‘ரிங் வாண்டரிங்’
Posted On:
28 NOV 2021 6:15PM by PIB Chennai
52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஜப்பானிய திரைப்படம் ‘ரிங் வாண்டரிங்’ தங்க மயில் விருதை வென்றது.
சிறந்த இயக்குனருக்கான வெள்ளி மயில் விருதை, ‘சேவிங் ஒன் ஹூ இஸ் டெட்’ படத்தின் இயக்குனர் வேக்லவ் கதர்ன்கா வென்றார்.
இந்திய மற்றும் மராத்தி நடிகர்கள் ஜித்தேந்திர பிகுலால் ஜோஷி, நிஷிகாந்த் காமத் ஆகியோர் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை வென்றனர்.
ஸ்பெயின் நடிகை ஏஞ்சலா மோலினா சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை வென்றார்.
பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ்..
நடுவர்களின் சிறப்பு விருதை ‘கோதாவரி’ படத்தை இயக்கிய மராத்தி இயக்குனர் நிகில் மகாஜன், பிரேசில் நடிகை ரெனாட்டோவுடன் பகிர்ந்து கொண்டார்.
‘தி டோரம்’ படத்தை இயக்கிய ரஷ்ய இயக்குனர் ரோமன் வாஷ்யனோவ், சிறப்பு விருதை பெற்றார்.
முதல் முறையாக திரையிடப்பட்ட படங்களில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் மாரி அலெஸ்ஸாண்டிரினியின் ‘ஜகோரி’ தேர்வு செய்யப்பட்டது.
ஸ்பெயின் திரைப்படம் ‘தி வெல்த் ஆப் த வோர்ல்ட்’ சிறப்பு விருதை பெற்றது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1775854
******
(Release ID: 1775919)
Visitor Counter : 252