பாதுகாப்பு அமைச்சகம்
கொழும்பு பாதுகாப்பு கூட்டம் மற்றும் பயிற்சியில் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை கடற்படைகள் இடையேயான செயல்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டது
Posted On:
28 NOV 2021 12:38PM by PIB Chennai
இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ‘கொழும்பு பாதுகாப்பு கூட்டம் மற்றம் பயிற்சி முதல் முறையாக நேற்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்று, மூன்று நாடுகளின் தெற்கு அரபிக் கடல் பகுதியில் உள்ள பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டன.
வர்த்தக கப்பல் போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம், சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியை பாதுகாப்பாக மாற்றுவது குறித்து இந்த நிகழ்வில்
கவனம் செலுத்தப்பட்டது
கடல்சார் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், விபத்து மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவதையும், இந்த கொழும்பு பாதுகாப்பு கூட்டம் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775797
******
(Release ID: 1775819)
Visitor Counter : 289