ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ரூ 225.24 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டங்களை உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படுத்த ஒப்புதல்

Posted On: 27 NOV 2021 3:07PM by PIB Chennai

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ. 225.24 கோடி மதிப்பிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை செயல்படுத்த நவம்பர் 26, 2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

அனுமதிக்கப்பட்ட 12 குடிநீர் திட்டங்களில் 11 பல கிராமங்களுக்கானவையும், ஒன்று ஒரே கிராமத்திற்குமானதும் ஆகும். இதன் மூலம் 19,000 கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு கிடைக்கும்.

 

இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 15.18 லட்சம் கிராமப்புற குடும்பங்களில், 7.41 லட்சம் (48.79%) வீடுகளில் குழாய் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 2.64 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது.

 

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகத்தை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை பரிசீலிக்கவும், அங்கீகரிக்கவும் மாநில அளவிலான திட்ட அனுமதிக் குழு உள்ளது. இந்திய அரசின் தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தால் பரிந்துரைக்கப்பட்டவரும் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

 

ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான குழாய் நீரை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தவும், தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் சிரமத்திலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை விடுவிக்கவும், ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775570

 

******



(Release ID: 1775665) Visitor Counter : 160


Read this release in: Telugu , English , Hindi