நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இதுவரை இல்லாத அளவில் அதிகமாக 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை இந்திய உணவுக் கழகம் கொள்முதல், கொவிட்டின் போது ஆற்றிய சேவைக்கு பாராட்டு

Posted On: 24 NOV 2021 4:40PM by PIB Chennai

கொவிட் பெருந்தொற்றின் போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய உணவுக் கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. 2021-22 ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதலை கழகம் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டு கொள்முதலை விட 11% அதிகமாகும்.

மும்பையில் இன்று நடைபெற்ற விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய இந்திய உணவுக் கழக நிர்வாக இயக்குநர் (மேற்கு மண்டலம்) திரு ஆர் பி சிங், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவு தானிய விநியோகத்தின் முதுகெலும்பாக இந்திய உணவுக் கழகம் உள்ளது என்றார்.

இத்திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. உணவு தானியங்களை சரியான நேரத்தில் கொண்டு செல்வதை உறுதி செய்வதில் பல சவால்களை சமாளித்த இந்திய உணவுக் கழக ஊழியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின்  கீழ் இலவச உணவு தானிய விநியோகத்தை மார்ச் 2022 வரை மேலும் நான்கு மாதங்களுக்கு ரூ 53,334 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீட்டிக்க மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774613

**********



(Release ID: 1774823) Visitor Counter : 144


Read this release in: English , Marathi , Hindi