பாதுகாப்பு அமைச்சகம்
பேரிடர் மேலாண்மை குறித்த 5-வது உலக மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்
Posted On:
24 NOV 2021 4:30PM by PIB Chennai
பேரிடர் மேலாண்மை குறித்த ஐந்தாவது உலக மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், எதிர்கால பேரழிவுகளைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும் சர்வதேச கட்டிடக்கலையை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்குத் தீர்வு காண்பதற்கான பயனுள்ள எதிர்வினை செயல்முறையானது சாகர் திட்டத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
எங்கள் ஆயுதப் படைகள் நாட்டின் நட்பு நாடுகளுக்கு தேவைப்படும் காலங்களில் எப்போதுமே துணை நிற்கின்றன என்று கூறிய திரு சிங்,
கொவிட்-க்குப் பிந்தைய உலகில் உலகளாவிய சவால்களைச் சமாளிக்க கூட்டுத் தீர்வு தேவை என்றார்.
வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்களின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் என்றும் 2030-ன் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்த உலகளாவிய மற்றும் தேசிய உத்திகளில் புதிய யோசனைகள் தேவை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளிப்படுத்தப்பட்ட சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்ற கருத்தின் மூலம் ஒன்றிணைந்த இந்தியப் பெருங்கடலுக்கான இந்தியாவின் லட்சியத்தை அவர் வலியுறுத்தினார்.
கடலோர நாடுகளுக்கிடையே பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குவது போன்ற தனித்துவமான மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய கூறுகளை சாகர் கொண்டுள்ளது என்பதை பாதுகாப்பு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நிலம் மற்றும் கடற்பகுதிகளில் பாதுகாப்பதற்கான திறன்களை மேம்படுத்துதல்; நிலையான பிராந்திய வளர்ச்சியை நோக்கி உழைத்தல்; நீல பொருளாதாரம்; மற்றும் இயற்கை பேரழிவுகள், கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க கூட்டு நடவடிக்கையை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
பேரிடர் மேலாண்மை குறித்த 5-வது உலக மாநாடு நவம்பர் 24 முதல் 27 வரை புது தில்லியில் ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. 'கொவிட்-19 கண்ணோட்டத்தில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான உறுதியை கட்டமைப்பதற்கான தொழில்நுட்பம், நிதி மற்றும் திறன்' என்ற தலைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774611
**********
(Release ID: 1774771)
Visitor Counter : 322