எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்டை மறுகட்டமைத்து மறுசீரமைக்க மின்சார அமைச்சகம் முன்வந்துள்ளது

Posted On: 23 NOV 2021 2:01PM by PIB Chennai

அக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்டை மறுகட்டமைத்து மறுசீரமைக்க மின்சார அமைச்சகம் முன்வந்துள்ள நிலையில், உத்தரகாண்ட் பேரழிவு மேலாண்மை அமைச்சர் திரு டி எஸ்  ராவத்திடம் ரூ 22.5 கோடிக்கான காசோலையை மத்திய மின்சார அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று வழங்கினார்.

 

அம்மாநில முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உத்தரகாண்ட் மாநில அரசுக்கு உதவுவதற்காக உடனடி நடவடிக்கைகளை எடுத்த மின்சாரத் துறை மத்திய பொதுத்துறை நிறுவனங்களை திரு ஆர் கே சிங் பாராட்டினார்.

 

இந்த நெருக்கடி காலத்தில் உத்தரகாண்டிற்கு உதவ மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார். கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு உதவ மின்சார துறை மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் முன்வந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

 

நெருக்கடி காலத்தில் உதவுவதற்காக மத்திய மின்சார துறை அமைச்சருக்கும் அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி நன்றி தெரிவித்தார்.

 

மின்சாரத் துறை இணை அமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், மின்சார அமைச்சக செயலாளர் திரு அலோக் குமார் மற்றும் மின்சார துறை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774200

******


(Release ID: 1774399)
Read this release in: Urdu , English , Hindi , Punjabi